செய்திகள்
வாணியம்பாடி அருகே பா.ஜ.க. பிரமுகர் பைக் எரிப்பு
வாணியம்பாடி அருகே பா.ஜ.க. பிரமுகர் பைக் எரிக்கப்பட்டது. இந்த சம்பவம் வாணியம்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாணியம்பாடி:
வாணியம்பாடி அருகே உள்ள கோவிந்தபுரத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 46). இவர் வாணியம்பாடி நகர பா.ஜ.க. எஸ்.சி. பிரிவு தலைவராக உள்ளார். இவர் தனக்கு சொந்தமான பைக் வீட்டு எதிரே நிறுத்தி இருந்தார். இன்று காலை பார்த்தபோது அந்த பைக் தீயில் எரிந்து கிடந்தது.
யாரோ மர்ம நபர் பைக்கை தீவைத்து எரித்து இருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து வாணியம்பாடி நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் வாணியம் பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.