செய்திகள்

வத்தலக்குண்டுவில் தனியார் நிறுவன ஊழியர் விபத்தில் பலி

Published On 2016-09-21 15:55 IST   |   Update On 2016-09-21 15:56:00 IST
வத்தலக்குண்டுவில் தனியார் நிறுவன ஊழியர் விபத்தில் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிலக்கோட்டை:

வத்தலக்குண்டுவில் வீட்டுஉபயோக பொருட்களை தவணை முறையில் விற்பனை செய்யும் ஏஜென்சி நிறுவனம் உள்ளது. அதில் பரமத்திவேலூர் கள்ளிப்பாளையத்தை சேர்ந்த கார்த்திக்(வயது21), இளவரசன்(20) ஆகியோர் வேலை செய்து வந்தனர். அவர்கள் மோட்டார் சைக்கிளில் ஒவ்வொரு கிராமமாக சென்று பொருட்களை விற்பனை செய்து வந்தார்கள். இதுபோல் நேற்று பைக்கில் அணைப்பட்டிக்கு சென்றனர்.

கு.பிரிவு அருகே சென்றபோது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 2 பேரும் பலத்த காயமடைந்தனர். நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதில் கார்த்திக் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த விபத்து குறித்து நிலக்கோட்டை இன்ஸ்பெக்டர் கருப்புசாமி விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News