செய்திகள்
அம்மாபேட்டை அருகே இளம்பெண் மாயம்
அம்மாபேட்டை அருகே இளம்பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அம்மாபேட்டை:
அம்மாபேட்டை காவல் சரகம் வடபாதி ஊராட்சி உடையார் கோவில் கீழத்தெருவை சேர்ந்தவர் மனோகரன் விவசாயி இவரது மகள் ஆர்த்தி (வயது 17). பிளஸ்2 படிப்பை முடித்துவிட்டு அம்மாபேட்டையில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் சென்று வந்தாராம்.
சம்பவத்தன்று வகுப்புக்கு சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லையாம். பல்வேறு இடங்களில் தேடியும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லையாம். இதுகுறித்து ஆர்த்தியின் தந்தை மனோகரன் கொடுத்த புகாரின்பேரில் அம்மாபேட்டை சப்-இன்ஸ்பெக்டர் பத்மநாபன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆர்த்தியை தேடி வருகின்றனர்.