செய்திகள்
கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த வாலிபர் கைது
கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கோவை:
குனியமுத்தூர் போலீசார் கோவை புதூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது தனியார் கல்லூரி முன்பு ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்தார்.
இதனால் போலீசார் சந்தேகம் அடைந்து அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் அதே பகுதியை சேர்ந்த முஜிபுர் ரகுமான் (வயது 24) என்றும், கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்து வருபவர் என்றும் தெரிய வந்தது.
இதைதொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.