செய்திகள்
தாம்பரம் அருகே கார் மோதி, கட்டிட காண்டிராக்டர் பலி: கல்லூரி மாணவர் கைது
தாம்பரம் அருகே கார் மோதி, கட்டிட காண்டிராக்டர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம்:
போரூர் அருகேயுள்ள கெருகம்பாக்கத்தை சேர்ந்தவர் பாஸ்கர் (54), கட்டிட காண்டிராக்டராக இருந்தார். இன்று காலை தாம்பரத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார்.
மதுரவாயல் பைபாஸ் சாலையில் வந்த போது பின்னால் வந்த கார் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது . இதனால் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர் விசாரணையில் சேத்துப்பட்டை சேர்ந்த சித்தார்த் (24) என்பவர் ஓட்டி வந்த கார் மோதியது தெரிய வந்தது. எனவே அவரை போலீசார் கைது செய்தனர். இவர் கூடுவாஞ்சேரி தனியார் சட்டக்கல்லூரியில் வக்கீலுக்கு படித்து வருகிறார்.