செய்திகள்

சமயநல்லூரில் இளம்பெண் மாயம்

Published On 2016-09-21 14:07 IST   |   Update On 2016-09-21 14:07:00 IST
சமயநல்லூரில் குழந்தையை பள்ளிக்கு விடசென்ற இளம்பெண் மாயமானார்.

வாடிப்பட்டி:

மதுரை மாவட்டம் சமயநல்லூர் வளன்நகரை சேர்ந்தவர் ஜெயவேலன். இவரது மனைவி மாலதி (வயது21).ஜெயவேலன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

இவர்களுக்கு சாய் கணேஷ் (3) என்ற மகன் உள்ளான். மாலதி மாமனார், மாமியாருடன் வசித்து வருகிறார்.

கடந்த 19-ந்தேதி மாலதி, சாய் கணேசை அந்த பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு கொண்டு சென்று விட்டு வருவதாக காலை 9.30 மணிக்கு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. அதனால் மாமனார் அங்கு சாமியும், அவரது மனைவியும் பல இடங்களில் தேடியும் மாலதியை கண்டுபிடிக்க முடியவில்லை.

இது சம்மந்தமாக மாமனார் அங்குசாமி கொடுத்த புகாரின் பேரில் சமயநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் வழக்குப் பதிவு செய்து மாயமான மாலதியை தேடி வருகிறார்.

Similar News