செய்திகள்
ஜோலார்பேட்டை அருகே மாடு விரட்டியதால் கிணற்றில் விழுந்து பெண் பலி
ஜோலார்பேட்டை அருகே மாடு விரட்டியதால் கிணற்றில் விழுந்து பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அருகே உள்ள வெட்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ் மின் வாரிய ஊழியர். இவரது மனைவி சந்திரா (வயது35). இன்று காலை அங்குள்ள விவசாய நில பகுதிக்கு சென்றார்.
அப்போது மாடு ஒன்று சந்திராவை நோக்கி ஓடி வந்தது. இதனால் பயந்து போன சந்திரா தப்பிக்க ஓடினார். அப்போது அங்குள்ள தரைக்கிணற்றில் தவறி விழுந்தார். தண்ணீரில் மூழ்கிய அவர் பரிதாபமாக இறந்தார்.
ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்கள் உதவியுடன் சந்திராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இறந்த சந்திராவுக்கு 3 மகன்கள் உள்ளனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.