செய்திகள்

திருமங்கலத்தில் ஆசிரியை வீட்டில் நகை-பணம் கொள்ளை

Published On 2016-09-21 06:01 GMT   |   Update On 2016-09-21 06:01 GMT
திருமங்கலத்தில் அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
பேரையூர்:

திருமங்கலத்தில் அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

திருமங்கலம் ஆறுமுக தெரு வடபகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி நாகஜோதி (வயது48). இவர் திருமங்கலம் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் ஓசூரில் டாக்டராக உள்ளார்.

இந்நிலையில் மகளை பார்ப்பதற்காக நாகஜோதி தனது கணவர் செல்வத்துடன் வீட்டை பூட்டிவிட்டு ஓசூருக்கு சென்றார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட ‘மர்ம’ ஆசாமிகள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து நாகஜோதிக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனே திருமங்கலத்துக்கு வந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் வந்த பிறகு கொள்ளை போன நகை, பணத்தின் மதிப்பு தெரிய வரும்.

இதற்கிடையில் இது குறித்து தகவலறிந்த திருமங்கலம் டவுன் போலீசார் கொள்ளை நடந்த வீட்டுக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகைகளை சேகரித்தனர்.

திருமங்கலம் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர் கொள்ளை நடந்து வருகிறது. போலீசார் பல நடவடிக்கைகள் எடுத்தாலும் கொள்ளை சம்பவத்தை தடுக்க முடியவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பீதியுடன் உள்ளனர்.

Similar News