செய்திகள்

சேலத்தில் பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை: போலீசார் விசாரணை

Published On 2016-09-20 05:37 GMT   |   Update On 2016-09-20 05:37 GMT
சேலத்தில் பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொண்டலாம்பட்டி:

சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை அடுத்த எருமாபாளையம், ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் வரதராஜன். இவரது மகள் ரங்கநாயகி(வயது 28). பி.சி.ஏ. இளங்கலை பட்டப்படிப்பு படித்துள்ளார்.

இவரை, சேலம் தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்த எம்.சி.ஏ. முதுகலை பட்டப்படிப்பை படித்த சுரேஷ்(வயது 34) என்பவருக்கு கடந்த 7 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில், பெற்றோர் வீட்டில் தங்கியிருந்த ரங்கநாயகி இன்று அதிகாலையில் தூங்கி எழுந்ததும் வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்றார். அதன் பிறகு வெகு நேரமாகியும், அவர் கழிவறையின் கதவை திறந்து வெளியே வரவில்லை.

இதையடுத்து பயமும், பதட்டமும் அடைந்த பெற்றோர், கழிவறையின் வெளியே நின்று கொண்டு மகளிடம் கதவை திறக்குமாறு கூறி, கதறி அழுதவாறு கதவை தட்டினர். நீண்ட நேரமாக கதவை தட்டினர். ஆனால் கதவும் திறக்கப்படவில்லை. மகளிடம் இருந்து எந்த விதசத்தமும் வரவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர், உறவினர்களை அழைத்து வந்து, அவர்கள் உதவியுடன் கழிவறையின் கதவை இரும்பு கம்பியால் உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அங்கு, ரங்கநாயகி துப்பட்டாவால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக தொங்கினார்

இது பற்றி தகவல் அறிந்ததும் கிச்சிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீராமசந்திரன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சின்னசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம்பெண் ரங்கநாயகியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தியதில், எம்.சி.ஏ. படித்துள்ள சுரேஷ் கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

திருமணம் ஆனதும் உடனே மனைவி ரங்க நாயகியை பெங்களூருக்கு அழைத்து சென்று, அங்கு ஒரு பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து, அதில் குடியமர்த்தினார்.

இந்த நிலையில், திருமணம் ஆன சில நாட்களிலேயே ரங்கநாயகி தனது கணவர் சுரேசுக்கு ஆண்மை இல்லை என்பதை தெரிந்து கொண்டார்.

இதையடுத்து அவருக்கு பல்வேறு மருத்துவமனைகளில் தொடர்ந்து மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இதனால், வரக்திஅடைந்த ரங்கநாயகி இது பற்றி தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

இதைதொடர்ந்து பெங்களூரில் 6 வருடங்களாக வசித்து வந்த சுரேசும், ரங்கநாயகியும், கடந்த ஆண்டு சொந்த ஊருக்கு திரும்பினார்கள்.

ஊருக்கு திரும்பி வந்ததும், 8 மாதங்களுக்கு முன்பு சுரேஷிடம் இருந்து விவாகரத்து பெற கோர்ட்டில் ரங்கநாயகி வழக்கு தொடர்ந்தார். விவாகரத்துக்கு சுரேசும் ஒப்புதல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கு தற்போது கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே தன்னுடைய பெற்றோர் வீட்டில் தங்கியிருந்த ரங்கநாயகி இன்று காலையில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது.

Similar News