செய்திகள்

பூண்டி ஒன்றியத்தில் மர்ம காய்ச்சல் தடுப்பு பணி தீவிரம்

Published On 2016-09-17 07:27 GMT   |   Update On 2016-09-17 07:27 GMT
பூண்டி ஒன்றியத்தில் மர்ம காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

ஊத்துக்கோட்டை:

திருவள்ளூர் மாவட்டத்தில் மர்ம காய்ச்சலுக்கு 9 பேர் உயிரிழந்தனர். மர்ம காய்ச்சல் பூண்டி ஒன்றியத்தில் பரவாமல் இருக்க சுகாதார துறை துணை இயக்குநர் பிரபாகரன் மேற்பார்வையில் வட்டார மருத்துவ அலுவலர் தீபா லட்சுமி தலைமையில் வட்டார மருத்துவ அதிகாரிகள் லட்சுமி, அருள் உடன் கூடிய மருத்துவ குழு 51 ஊராட்சிகளில் மர்ம காய்ச்சல் தடுப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு ஊராட்சிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

துப்புரவு தொழிலாளர்கள் மூலம் கழிவு நீர் கால்வாய் சுத்தம் செய்து வருகின்றனர். பழைய டயர், டியூப்களை அப்புறப்படுத்தி கொசு ஒழிப்புக்காக புகை பீச்சும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களான பஸ் நிலையம், மருத்துவமனை, பள்ளிகளில் நிலவேம்பு கசாயம் கொடுத்து வருகின்றனர்.

Similar News