செய்திகள்

அரசு பஸ் மோதி பள்ளி மாணவன் பலி

Published On 2016-09-10 15:13 IST   |   Update On 2016-09-10 15:13:00 IST
அரசு பஸ் மோதி பள்ளி மாணவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத் நத்தாநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் முருக பாரதி (11). வாலாஜா பாத்தில் உள்ள அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார்.

இவர். நேற்று பள்ளி செல்வதற்காக தனது வீட்டில் இருந்து வந்து சாலையை கடக்கும் போது பின்னால் வந்த அரசு பஸ் மோதி படுகாயமடைந்தார். சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முருகபாரதி சிசிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார்.

இது குறித்து வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Similar News