செய்திகள்

துரைப்பாக்கத்தில் கார் விற்று தருவதாக கூறி ரூ.75 லட்சம் மோசடி

Published On 2016-09-10 14:34 IST   |   Update On 2016-09-10 14:34:00 IST
துரைப்பாக்கத்தில் கார் விற்று தருவதாக கூறி ரூ.75 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவான்மியூர்:

துரைப்பாக்கம் மேட்டுக்குப்பம் பழைய மகாபலிபுரம் சாலையில் பழைய கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வருபவர் ராஜாசிங்.

இவரிடம் முகப்பேரை சேர்ந்த திருநாவுக்கரசு கீழ்கட்டளையை சேர்ந்த விஜயராம், வேளச்சேரியை சேர்ந்த மாரிநாதன் உள்பட 15 பேர் தங்களது காரை விற்று தரும்படி கூறி காரை ராஜாசிங்கிடம் கொடுத்தனர்.

காரை பெற்றுக் கொண்ட ராஜாசிங் அதை விற்றார். ஆனால் பணத்தை காரின் உரிமையாளர்களுக்கு கொடுக்காமல் குடும்பத்துடன் ராஜாசிங் தலைமறைவாகி விட்டார். கார்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.75 லட்சம் ஆகும்.

இதுகுறித்து திருநாவுக்கரசு, விஜயராம் துரைப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜாசிங்கை தேடி வருகிறார்கள்.

Similar News