செய்திகள்

ஜனாதிபதி நிகழ்ச்சியால் கட்டுப்பாடு: சென்னையில் 22 விமானங்கள் தாமதம்

Published On 2016-09-10 13:45 IST   |   Update On 2016-09-10 13:45:00 IST
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதை முன்னிட்டு விமான நிலையத்தில் விமானங்கள் தரை இறங்குவதிலும், அப்பகுதியில் பறக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
ஆலந்தூர்:

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதையடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் பரங்கிமலை அருகே உள்ள விமான நிலையத்தில் விமானங்கள் தரை இறங்குவதிலும், அப்பகுதியில் பறக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

இதனால் விமானங்கள் புறப்படுவதிலும், தரை இறக்குவதிலும் கால தாமதம் ஏற்பட்டது.

மலேசிய, துபாய், சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து வரவேண்டிய 14 விமானங்கள் தாமதமாக வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் பயணிகளை வரவேற்க வந்தவர்கள் காத்து கிடந்தனர்.

சென்னையில் இருந்து மும்பை, டெல்லி, கொல்கத்தா, திருவனந்தபுரம் ஆகியவற்றுக்கு செல்ல வேண்டிய 8 விமானங்கள் தாமதாக புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

ஆனால் புறப்படும் நேரம் சரியாக தெரிவிக்காததால் அதிகாரிகளிடம் யணிகள வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை அதிகாரிகள் சமாதானப்படுத்தினர்.

Similar News