செய்திகள்

மதுராந்தகம் அருகே அடகு கடையின் சுவரை உடைத்து 30 பவுன் நகை கொள்ளை வீச்சு

Published On 2016-09-10 12:10 IST   |   Update On 2016-09-10 12:10:00 IST
மதுராந்தகம் அருகே அடகு கடையை உடைத்து நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுராந்தகம்:

மதுராந்தகம் அருகே உள்ள பவுச்சூர் கிராமத்தில் வசித்து வருபவர் பாராசந்த் (45). இவர் பஜார் பகுதியில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றார்.

இன்று காலையில் அவரது அடகு கடையின் பின்புறம் உள்ள சுவர் உடைக்கப்பட்டு இருந்ததை அந்த பகுதி மக்கள் பார்த்தனர். இதுபற்றி பாராசந்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் உடனே கடைக்கு வந்து பார்த்தார். சுவரில் ஒரு ஆள் நுழையும் அளவிற்கு கடப்பாறையால் உடைக்கப்பட்டு இருந்தது. கடையை திறந்து உள்ளே சென்று பார்த்த போது லாக்கரும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 30 பவுன் அடகு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

முன்பக்கமாக உடைத்தால் தெரிந்து விடும் என்பதால் பின்புற சுவரை உடைத்து கொள்ளையர்கள் புகுந்து இந்த துணிகர செயலில் ஈடுபட்டுள்ளனர். மிக பலமிக்க லாக்கரை எப்படி உடைத்து நகையை எடுத்து சென்றார்கள் என்பது அதிர்ச்சியாக உள்ளது என்று பராசந்த் தெரிவித்தார்.

இதுகுறித்து அணைக்கட்டு போலீசாருக்கு அவர் தகவல் கொடுத்தார். போலீசாரும், கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை பதிவு செய்தனர். மேலும் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு துப்பறிந்தது. அடகு கடையை உடைத்து நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News