செய்திகள்
பிறந்த நாள் கொண்டாடிவிட்டு திரும்பிய போது சாலை தடுப்பு சுவரில் கார் மோதல்: 5 பேர் காயம்
கொட்டிவாக்கம் பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது கார் எதிர்பாராதவிதமாக சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோதியது. இந்த விபத்தில் 5 பேர் காயமடைந்தனர்.
திருவான்மியூர்:
விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் ரித்திஷ் (26). இவரது நண்பர்கள் ரஞ்சித், ரஞ்சிதா, குமரன், காவியா.
நேற்று இரவு காவியாவின் பிறந்தநாளை கொண்டாட ரித்திஷின் சொகுசு காரில் 5 பேரும் மெரினா கடற்கரைக்கு சென்றனர். பின்னர் பிறந்த நாளை கொண்டாடி விட்டு இன்று அதிகாலை 5 மணிக்கு வீடு திரும்பினர். காரை ரித்திஷ் ஓட்டினார்.
மெரினா கடற்கரையில் இருந்து பாலவாக்கம் நோக்கி கிழக்கு கடற்கரை சாலை வழியாக கார் சென்று கொண்டு இருந்தது.
நீலாங்கரை அடுத்த கொட்டிவாக்கம் பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது கார் எதிர்பாராதவிதமாக சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோதியது. இதில் தடுப்பு சுவரில் இருந்த மின் கம்பம் சரிந்து கீழே விழுந்தது. அந்த நேரத்தில் மின்சாரம் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மின் கம்பம் நடு ரோட்டில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த விபத்தில் காரில் இருந்த 5 பேரும் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் அடையாறு போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேலும் நடுரோட்டில் கிடந்த மின் கம்பியையும், காரையும் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.
இதுகுறித்து அடையாறு போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.