செய்திகள்

காரைக்கால் மாவட்டத்துக்கு காவிரி நீர் கிடைக்க உச்சநீதிமன்றத்தில் முறையீடு: நாராயணசாமி பேட்டி

Published On 2016-09-08 12:21 IST   |   Update On 2016-09-08 12:21:00 IST
காரைக்கால் மாவட்டத்துக்கு காவிரி நீர் கிடைக்க உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்து உள்ளோம் என்று புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
ஆலந்தூர்:

புதுவை முதல்-மந்திரி நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

கர்நாடக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி காவிரியில் தண்ணீரை திறந்து விட வேண்டும். அணையில் போதிய நீர் இருப்பு உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் மாவட்ட விவசாயிகள் காவிரி நீரை நம்பி உள்ளனர். காரைக்கால் மாவட்டத்துக்கு காவிரி நீர் கிடைக்க உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்து உள்ளோம்.

இதுபற்றி பிரதமரிடமும், அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் சென்று முறையிடுவோம்.

நான் புதுவை மாநிலத்தில் எந்த தொகுதியில் போட்டியிட வேண்டும்? எந்த எம்.எல்.ஏ. ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் மேலிடம்தான் முடிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News