செய்திகள்
காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்
காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
ஆலந்தூர்:
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து கர்நாடக அரசு தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட்டுள்ளது. தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதற்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு உள்ளது.
தமிழகத்துக்கு கர்நாடகா தண்ணீர் தராமல் இருந்த போது தமிழர்கள் பொறுமையோடு அமைதியான முறையில் போராடினார்கள். அதேபோல், கர்நாடக மக்களுக்கும் பொறுமை தேவை. அதுதான் எல்லோருக்கும் நல்லது.
கர்நாடகாவில் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டியது கர்நாடக அரசின் கடமை. அது கர்நாடக முதல்-மந்திரியின் பொறுப்பு.
தமிழக பா.ஜனதாவை பொறுத்தவரை தற்போது கர்நாடகா திறந்துவிட்டுள்ள தண்ணீர் போதாது. இன்னும் கூடுதலாக தண்ணீர் தரவேண்டும்.
குளச்சல் இனையம் துறைமுகம் வரக்கூடாது என்பது குறித்து சிலர் போராடி வருகிறார்கள். யாருக்கு பாதிப்பு என்ற விவரம் தெரியாமலேயே அவர்கள் போராடுகிறார்கள். அவர்களை தூண்டி விடுவதில் அயல்நாட்டு சதி உள்ளதா? என்பதை கண்டறிய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.