செய்திகள்

பெசன்ட்நகர் மாதா ஆலயத்தில் இன்று மாலை தேர் பவனி

Published On 2016-09-07 14:35 IST   |   Update On 2016-09-07 14:35:00 IST
பெசன்ட்நகர் மாதா ஆலயத்தில் இன்று மாலை தேர் பவனி நடக்கிறது.
சென்னை பெசன்ட்நகர் ஆரோக்கிய மாதா ஆலய திருவிழா கடந்த 29-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

முக்கிய திருவிழாவான தேர் பவனி நிகழ்ச்சி இன்று மாலை நடைபெறுகிறது. இதையொட்டி ஜெபமாலை, மாதா மன்றாட்டு, நவநாள் ஜெபம் மற்றும் வழிபாடுகள் நடைபெறுகின்றன.

சென்னை மயிலை உயர் மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் கூட்டு திருப்பலி நடைபெறுகிறது. பின்னர் புனித ஆரோக்கிய மாதா பெரிய தேர் பவனி நடைபெறுகிறது.

மிக்கேல் சம்மனசு, செபஸ்தியார், அந்தோணி யார், சூசையப்பர், உத்தரிய மாதா, சொரூபங்கள் சிறிய சப்பரங்களில் பவனியாக கொண்டு வரப்படுகின்றன.

தேர் பவனி பீச்ரோடு, பஸ்நிலையம், எம்.ஜி.ரோடு வழியாக சென்று பேராலய முகப்பை வந்தடையும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.

நாளை மாலை 6 மணிக்கு அன்னையின் திருக்கொடி இறக்கப்படுகிறது. அத்துடன் ஆண்டு விழா நிறைவடைகிறது.

Similar News