செய்திகள்
காஞ்சீபுரத்தில் விநாயகர் சிலைகளை கரைக்க 11 இடங்கள் அறிவிப்பு
காஞ்சீபுரம் மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை கரைக்க 11 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு அமைப்புகள் மூலம் நகரில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் காஞ்சீபுரம் சரகத்தில் 270 விநாயகர் சிலைகள் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டு உள்ளது.
இதேபோல் ஸ்ரீபெரும்புதூர் 186, செங்கல்பட்டு 198, மதுராந்தகம் 365, வண்டலூர் 130, மாமல்லபுரம் 344 என மாவட்டம் முழுவதும் 1625 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு உள்ளனர்.
மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் இன்று முதல் வருகிற 11-ந் தேதி வரை நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
விநாயகர் சிலைகள் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும். காலை 8 மணிமுதல் மாலை 6 மணிக்குள் விநாயகர் ஊர்வலத்தை நடத்தி முடிக்க வேண்டும். ஊர்வலங்கள் காவல் துறையினர் அனுமதிக்கப்பட்ட பாதைகளில் மட்டுமே செல்ல வேண்டும்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் கரைக்க அனுமதிக்கப்பட்ட இடங்கள் வருமாறு:-
காஞ்சீபுரம்- பொன்னேரிக்கரை, மதுராந்தகம் ஏரி, தழுதாளிகுப்பம் கடல் பகுதி, கடப்பாக்கம் கடல் பகுதி, மாமல்லபுரம் கடல், சதுரங்கபட்டினம் கடல், கடலூர்குப்பம் கடல், பரமன் கேணிகுப்பம் கடல், வடபட்டினம் கடல், கோவளம் கடல், நீலாங்கரை கடல் ஆகிய இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.