செய்திகள்
நீலாங்கரையில் வாகனம் மோதி கொத்தனார் பலி
நீலாங்கரையில் வாகனம் மோதி கொத்தனார் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவான்மியூர்:
நீலாங்கரை கானாத்தூரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (50). கொத்தனார். இவர் நேற்று இரவு விநாயகர் சதுர்த்தி பூஜைக்காக பொருட்களை வாங்கிக் கொண்டு கானாத்தூர் நாகூர் மீரான் நகர் பஸ்நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் பாலகிருஷ்ணன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். இது குறித்து அடையாறு போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.