செய்திகள்
வேதாரண்யம் அருகே விபத்தில் ஆசிரியர் பலி: போலீசார் விசாரணை
வேதாரண்யம் அருகே விபத்தில் ஆசிரியர் பலியானார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த தேத்தாக்குடி தெற்கு கிராமத்தை சேர்ந்தவர் சசிக்குமார் (வயது 43). இவர் வேதாரண்யம் நகராட்சிக்கு உட்பட் வடகட்டளை நல்லத்தன் காடு பகுதியில் உதவி தொடக்கப்பள்ளி நடத்தி வருகிறார். அதே பள்ளியில் ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் இன்று அவரது சித்தப்பா மகன் திருமணம் நடைபெற்றது. அதற்காக அவர் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.அப்போது தேத்தாக்குடி பகுதி வைத்தியர்காடு என்ற இடத்தில் சென்ற போது கீழே விழுந்து படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவ்வழியே சென்ற பொதுமக்கள் அவரை மீட்டு வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இது குறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சசிக்குமார் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? அல்லது அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு சென்றதால் இறந்தாரா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.