செய்திகள்
கீழ்வேளூர் அருகே விபத்து: பெண் கவுன்சிலர் கணவர் உள்பட 2 பேர் பலி
கீழ்வேளூர் அருகே ஆம்னி வேன்-மோட்டார் சைக்கிள் மோதி கவுன்சிலர் கணவர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
கீழ்வேளூர்:
நாகை மாவட்டம் செம்பியன் மகாதேவி கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி (40). விவசாயி.
இவரது நண்பர் பாலக்குறிச்சியை சேர்ந்த நாகேந்திரன் (62). டிரைவர். இவர்கள் இருவரும் இன்று காலை மோட்டார் சைக்கிளில் கீழ்வேளூரில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்றனர். பின்னர் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். தேவூர் மெயின்ரோட்டில் வரும் போது எதிரே வந்த ஆம்னி வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயம் அடைந்த கருணாநிதி சம்பவ இடத்தில் இறந்தார். நாகேந்திரனை 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியில் அவர் பரிதாபமாக இறந்தார்.
விபத்தில் சிக்கிய அம்னி வேன் நிலை தடுமாறி ரோடு ஓரம் இருந்த மரத்தில் மோதியது. இதில் வேன் டிரைவர் தாமோதரன் அதில் பயணம் செய்த 5 பேர் காயம் அடைந்தனர். இதில் தாமோதரன் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் மற்ற 5 பேர் கீழ்வேளூரில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.