செய்திகள்
குத்தாலம் அருகே சுகாதார பணி அதிகாரிகள் சிறைபிடிப்பு: 3 பேர் மீது போலீசில் புகார்
ஆலங்குடி கிராமத்தில் முகாமிட்டு சுகாதாரப்பணிகளை மேற்கொண்ட சுகாதார அதிகாரிகளை அக்கிராம இளைஞர்கள் முற்றுகையிட்டு, ஊராட்சியில் சுகாதாரப்பணிகள் செய்யப்படவில்லை என குற்றம்சாட்டி தடுத்து நிறுத்தினர்.
குத்தாலம்:
நாகை மாவட்டம் குத்தாலம் அருகே ஆலங்குடி கிராமத்தை சேர்ந்த கலியமூர்த்தி மகன் பாலமுருகன்(23). இவர் சென்னையில் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடுமையான காய்ச்சல் இருந்ததால் ஊருக்கு வந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தற்போது மேல்சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பாலமுருகனுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருந்ததால் மாவட்ட பூச்சியியல் வல்லுனர் சுப்ரமணி தலைமையில் 10-க்கும் மேற்பட்ட மாவட்ட மருத்துவக்குழுவினர், நேற்று (வியாழக்கிழமை) ஆலங்குடி கிராமத்தில் முகாமிட்டு சுகாதாரப்பணிகளை மேற்கொண்டனர். அவர்களை அக்கிராம இளைஞர்கள் சிலர் முற்றுகையிட்டு ஊராட்சியில் சுகாதாரப்பணிகள் செய்யப்படவில்லை என குற்றம்சாட்டி தடுத்து நிறுத்தினர்.
இதுகுறித்து தகவலறிந்த குத்தாலம் வட்டார வளர்ச்சி அலுவலர் லதா மற்றும் மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு கலியதீர்த்தன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் 2 மணிநேர போராட்டம் முடிவுக்கு வந்தது.
இச்சம்பவம் குறித்து வட்டார மருத்துவ அலுவலர் நூருல் ஹக் அரசு அலுவலர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாக ஆலங்குடி கிராமத்தை சேர்ந்த கணேசமூர்த்தி, தேவதாஸ், அருள்குமரன் ஆகிய மூவர் மீது குத்தாலம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.