செய்திகள்

பாகூர் ஏரி சுற்றுலாதலமாக்கப்படும்: நாராயணசாமி தகவல்

Published On 2016-09-01 19:08 IST   |   Update On 2016-09-01 19:08:00 IST
புதுவை சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் உறுப்பினர் தனவேலு, பாகூர் ஏரி சுற்றுலாதலமாக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த நாராயணசாமி பாகூர் ஏரி சுற்றுலாதலமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

புதுச்சேரி:

புதுவை சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் உறுப்பினர் தனவேலு, பறவைகள் வந்து செல்லும் வகையில் பாகூர் ஏரியில் மரங்கள் நடப்பட்டு சுற்றுலாதலமாக்கப்படுமா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த முதல்-அமைச்சர் நாராயணசாமி, பாகூர் ஏரியை சுற்றுலாதலமாக்க ஏற்கனவே திட்டம் வகுக்கப்பட்டபோது சில அமைப்புகள் நடத்திய போராட்டம் காரணமாக அத்திட்டம் நிறுத்தப்பட்டது. தற்போது மத்திய அரசின் அனுமதியை பெற்று, போராட்டம் நடத்திய அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தி பாகூர் ஏரியை சுற்றுலாதலமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிலளித்தார்.

Similar News