செய்திகள்

மதுவாங்கி தர மறுத்த நண்பரை குத்தி கொல்ல முயன்ற வாலிபர்

Published On 2016-09-01 17:38 IST   |   Update On 2016-09-01 17:39:00 IST
திண்டுக்கல்லில் மது வாங்கிர தர மறுத்த நண்பரை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகே கோபால்பட்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் லோகேஸ்வரன். கூலி தொழிலாளி. அவரது நண்பர் மகேந்திரராஜா. சம்பவத்தன்று மகேந்திரராஜா தனது நண்பர் லோகேஸ்வரனிடம் தனக்கு மது வாங்கி தரும்படி கூறினார்.

ஆனால் லோகேஷ்வரன் இதற்கு மறுத்துவிட்டார். இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அது மோதலாக வெடித்தது. ஆத்திரம் அடைந்த மகேந்திரராஜா கத்தியால் லோகேஸ்வரனை குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். இதனை பார்த்ததும் மகேந்திரராஜா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

உயிருக்கு போராடிய லோகேஸ்வரனை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து சாணார்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து மகேந்திரராஜாவை தேடி வருகிறார்கள்.

Similar News