செய்திகள்

மயிலாடுதுறை அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 3 பேர் கைது

Published On 2016-08-26 16:19 IST   |   Update On 2016-08-26 16:19:00 IST
மயிலாடுதுறை அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை அருகே திருமங்கலம் விக்ரமனாற்றின் கரையோரமாக அனுமதி இன்றி ஆற்று மணல் அள்ளப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில் அப்பகுதிக்கு குத்தாலம் இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவம் மற்றும் போலீசார் சென்றனர். அங்கு 3 டிராக்டரில் மணல் ஏற்றி கொண்டிருந்தனர். உடனே போலீசார் அவர்களை மடக்கி விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் மயிலாடுதுறை அருகே பொய்கைக்குடி தெற்கு தெரு முத்துசெல்வன் (39), கட்டளைச்சேரி மதியழகன் மகன் கலையரசன் (22), நத்தம் சந்துதெரு ரமேஷ் (30) என்பது தெரியவந்தது.

டிராக்டர் டிரைவர்களான மூவரையும் கைது செய்து 3 டிராக்டரையும் பறிமுதல் செய்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News