செய்திகள்

பெண் இன்ஸ்பெக்டரை தாக்கிய விமான நிலைய ஊழியர் கைது

Published On 2016-08-26 14:34 IST   |   Update On 2016-08-26 14:34:00 IST
சென்னை விமான நிலையத்தில் பெண் இன்ஸ்பெக்டரை தாக்கிய விமான நிலைய ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
தாம்பரம்:

தாம்பரம் அடுத்த சானிடோரியம் லால் பகதூர் சாஸ்திரி தெருவை சேர்ந்தவர் ராஜபாண்டி. இவர் சென்னை விமான நிலையத்தில் சரக்கு ஏற்றுதல், இறக்குதல் பிரிவில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி புனிதவதி.

கணவர்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து புனிதவதி தாம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இதுகுறித்து ராஜபாண்டியிடம் இன்ஸ்பெக்டர் நசீமா விசாரணை நடத்தினார். அப்போது இன்ஸ்பெக்டர் நசீமாவிடம் ராஜபாண்டி தகராறு செய்து அவரை தாக்கி கீழே தள்ளி விட்டார்.

இதை பார்த்த மற்ற போலீசார் ராஜபாண்டியை மடக்கி பிடித்தனர். அவர் மீது அரசு ஊழியரை தாக்கியது, தகாத வார்த்தையில் திட்டியது, பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் ஆகிய பிரிவில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Similar News