செய்திகள்

காஞ்சிபுரம் அருகே வாலிபர் வெட்டிக் கொலை

Published On 2016-08-26 11:58 IST   |   Update On 2016-08-26 11:58:00 IST
காஞ்சிபுரம் அருகே வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம்:

திருவள்ளூரை அடுத்த கீழ்நல்லாத்தூரை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மகன் பிரகாஷ் (வயது 23). ஐ.டி.ஐ. படித்துள்ள இவர் காஞ்சிபுரத்தை அடுத்த முகரவாக்கம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

நேற்று காலை வேலைக்கு சென்ற பிரகாஷ் பின்னர் திரும்பி வரவில்லை. அவரை உறவினர்கள் தேடி வந்தனர்.

இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள சவுக்கு தோப்பில் தலையில் வெட்டுக் காயத்துடன் பிரகாஷ் இறந்து கிடந்தார்.தகவல் அறிந்ததும் பாலுசெட்டிசத்திரம் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் மற்றும் போலீசார் விரைந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பிரகாஷ் கொலைக்கான காரணம், கொலையாளிகள் யார்? என்பது தெரியவில்லை. பெண் தகராறில் கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இது தொடர்பாக பிரகாசுடன் நெருங்கி பழகியவர்கள் யார்? யார்? என்ற விசாரணை நடந்து வருகிறது.

Similar News