செய்திகள்

மயிலாடுதுறையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2016-08-25 16:09 IST   |   Update On 2016-08-25 16:10:00 IST
நாகை மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் சார்பாக மயிலாடுதுறை தாசில்தார் அலுவலம் முன்பு 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
மயிலாடுதுறை:

நாகை மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் சார்பாக மயிலாடுதுறை தாசில்தார் அலுவலம் முன்பு 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ச.பரமசிவம் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் த.கலியபெருமாள் வரவேற்றார். இதில் மயிலாடுதுறை, வேதராண்யம், இளந்தோப்பு, செம்மபனார்கோயில், திருமருகல், ஸ்ரீகண்டபுரம், சீர்காழி, திருவெண்காடு பகுதியை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.

மாநில அமைப்பு செயலாளர் கண்ணன், மாவட்ட துணைத்தலைவர் உலகநாதன், மாவட்ட பிரச்சாரசெயலாளர் தீனதயாளன், மாவட்ட பொருளாளர் செல்வராஜன் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு வழங்குவதை போன்று குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.3500ம் மத்திய அரசு வழங்குவதை போல் மருத்துவபடி மாதம்தோறும் 500 வழங்க வேண்டும். ஓய்வுதியம் பெற 20ஆண்டு பணிக்காலம் நிர்ணயம் செய்யவேண்டும். ஓய்வூதியர்களுக்கு அடையாளஅட்டை வழங்கவேண்டும். அரசு பணியாளர்களுக்கு வழங்குவது போன்று ஓய்வூதியதாரர் இறந்தால் அவரது வாரிசுதாரர்களுக்கு குடும்ப பாதுகாப்பு நிதி உதவித்தொகையாக குறைந்தது 3லட்சம் வழங்க வேண்டும்.

அரசு பணியாளர்களுக்கு வழங்குவது போல் ஓய்வூதியர் இறக்க நேர்ந்தால் ஈமசடங்கிற்காக 25ஆயிரம் வழங்க வேண்டும். வருவாய் துறை கிராம அலுவலர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் 3050வழங்க வேண்டும் மத்தியஅரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியகுழு பரிந்துரையின் படி வெளியிடப்படும் மத்திய அரசின் ஆணைகளின் பலன்கள் அனைத்தும் தமிழக அரசு ஓய்வூதியதாரர்களுக்கு எந்தவித குறைவும் இன்றி முழுமையாக வழங்கும் வகையில் அமைய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்பது உள்ளிட்ட 17கோரிக்கைகளை வலியுறுத்தி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Similar News