செய்திகள்

குளிர்பானம் வாங்கி கொடுத்து 8-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்: தொழிலாளி கைது

Published On 2016-08-25 09:41 IST   |   Update On 2016-08-25 09:41:00 IST
விருத்தாசலத்தில் குளிர்பானம் வாங்கி கொடுத்து 8-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம்:

விருத்தாசலத்தை சேர்ந்தவர் ஜெனிபர் (வயது 13, பெயர் மாற்றப்பட்டுள்ளது). விருத்தாசலத்தில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். பூந்தோட்ட பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு அடிக்கடி சென்றுவந்தார்.

அதே பகுதியில் கூலி தொழிலாளி ஜெகநாதன் (60) வசித்து வருகிறார். அவரது வீட்டுக்கு ஜெனிபர் சென்றார். ஜெகநாதனின் மனைவி உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். எனவே அங்கு ஜெனிபர் வீட்டு வேலைகளை செய்தார்.

அப்போது ஜெனிபரை ஜெகநாதன் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இதை வெளியே சொல்லக்கூடாது என கூறி குளிர்பானம் மற்றும் சாக்லேட் வாங்கி கொடுத்து அவர் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி வகுப்பறையில் ஜெனிபர் குளிர்பானம் குடித்து கொண்டிருந்தார். இதை பார்த்த மாணவிகள் ஆசிரியரிடம் தெரிவித்தனர். ஆசிரியர் விசாரித்தபோது தொழிலாளி ஜெகநாதன் குளிர்பானம் வாங்கி கொடுத்தது தெரியவந்தது. அவர் ஏன் குளிர்பானம் வாங்கி கொடுக்கிறார் என கேட்டபோது, ஜெனிபரை அவர் பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

இதையறிந்த ஜெனிபரின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் நாகரத்தினம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதைத் தொடர்ந்து ஜெகநாதனை போலீசார் கைது செய்தனர். ஜெனிபரை மருத்துவ பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

Similar News