செய்திகள்

வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிள் மோதல்: 2 பேர் காயம்

Published On 2016-08-23 15:20 IST   |   Update On 2016-08-23 15:20:00 IST
வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வேதாரண்யம்:

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் நடைபெற்ற திருமணத்திற்கு சமையல் செய்வதற்காக திருக்குவளை - மணக்குடியிலிருந்து தருமராஜ் (30) என்பவரும், திருத்துறைப்பூண்டி மேலகொற்கை பகுதி ஐயப்பன் (38) என்பவரும் மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

அப்போது கோடியக்கரை காலனி தெருவிலிருந்து மெயின்ரோட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த பாலசுப்பிரமணியன் மகன் செந்தில்குமார் என்பவர் இவர்கள் மீது மோதிவிட்டார்.

இதில் ஐயப்பன் பலத்த காயமடைந்து திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். தருமராஜ் வெளிநோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். தருமராஜ் கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Similar News