செய்திகள்

சீர்காழி அருகே 2 வீடுகளில் 11 பவுன் நகை-பணம் திருட்டு

Published On 2016-08-20 17:00 IST   |   Update On 2016-08-20 17:00:00 IST
சீர்காழி அருகே 2 வீடுகளில் 11 பவுன் நகை மற்றும் பணம் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சீர்காழி:

சீர்காழியை அடுத்த தொடுவாய் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் வெள்ளரீசன்(வயது 44). இவர் மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகிறார்.

இந்நிலையில் இப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அதை காண வெள்ளரீசன் இரவில் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்றார்.

பின்னர் 2 மணிக்கு வந்து பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்து இருந்த 10 பவுன் நகை மற்றும் 40 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

இதே போன்று தொடுவாய், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயா(38). இவரும் கோவில் திருவிழாவிற்கு சென்றுவிட்டு வந்து பார்த்த போது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த ½ பவுன் மோதிரம் மற்றும் ஆயிரம் ரூபாய் பணத்தையும் திருடி சென்றது தெரிய வந்தது.

இது குறித்து சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகுதுரை, குற்றப்பிரிவு போலீசார் வில்சன், வசந்த் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News