செய்திகள்

தாம்பரத்தில் இருந்து சென்று மாயமான விமானம் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை: மத்திய மந்திரி பேட்டி

Published On 2016-08-19 07:55 GMT   |   Update On 2016-08-19 07:55 GMT
தாம்பரத்தில் இருந்து சென்று மாயமான விமானம் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை என மத்திய மந்திரி பேட்டி அளித்துள்ளார்.

சென்னை:

புதுடெல்லியில் இருந்து நேற்று இரவு சென்னை வந்த மத்திய பாதுகாப்பு துறை இணை அமைச்சர் சுபாஷ் ராமராவ் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தாம்பரம் விமான படை தளத்தில் இருந்து 29 பேருடன் அந்தமான் சென்ற ஏ.என்.32 ரக விமானத்தை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

மாயமான அந்த விமானத்தை கண்டுபிடிக்கும் பணியில் எந்தவிதமான தகவலும், தடயங்களும் கிடைக்கவில்லை.

ஆனாலும் கடலோர கப்பல் படை விமானம், இந்திய விமானப்படை விமானங்கள், கடற்படையின் கப்பல்கள் தொடர்ந்து மாயமான விமானத்தை தேடி கொண்டு இருக்கிறது.

கடல் மேல் மட்டுமல்லாமல் கடல் அடியில் நவீன ரக நீர்மூழ்கி கப்பல் மூலமாக தேடி கொண்டு இருக்கிறோம். ஆனாலும் இதுவரை எந்த தகவலும் கிடைக்காதது வருத்தம் அளிக்கிறது.

எதிர்காலத்தில் இது போல் விமானம் மாயமானதை தடுப்பதற்கு வழி முறைகளை ஆராய்ந்து வருகிறோம். எதனால் இதுபோல் மாயமாகுகிறது என்று பாதுகாப்பு உயர் அதிகாரிகளுடன், விஞ்ஞானிகளுடனும் ஆலோசனை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News