செய்திகள்

பெருங்குடியில் தீ விபத்து: 450 புதிய மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசம்

Published On 2016-08-15 15:46 IST   |   Update On 2016-08-15 15:46:00 IST
பெருங்குடி அருகே தீ விபத்தில் 450 புதிய மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசம் அடைந்தன.
திருவான்மியூர்:

பெருங்குடி பர்மா காலனியில் தனியார் நிறுவனத்தின் புதிய மோட்டார் சைக்கிள் விற்பனை ஷோரும் உள்ளது. இதன் அருகே விற்பனைக்கு வரும் மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம்.

நேற்று இரவு திடீரென அங்கே நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்ததும் துரைப்பாக்கம், திருவான்மியூரில் இருந்து 4 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் விற்பனைக்கு இருந்த 450 புதிய மோட்டார் சைக்கிள்கள் தீயில் கருகி சேதம் அடைந்தன.

அந்த இடத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததால் மற்ற மோட்டார் சைக்கிள்கள் தப்பின. சேதமதிப்பு பல லட்சம் இருக்கும்.

நேற்று இரவு அப்பகுதியில் கோவில் திருவிழா நடந்துள்ளது. அப்போது வெடிக்கப்பட்ட பட்டாசு இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தின் அருகே உள்ள டிரான்ஸ்பார்மர் மீது விழுந்ததாக தெரிகிறது. இதில் ஏற்பட்ட தீப்பொறியால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தீ விபத்துக்கு நாசவேலை காரணமா? என்பது குறித்தும் துரைபாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News