செய்திகள்

அரியலூரில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2016-08-04 22:38 IST   |   Update On 2016-08-04 22:38:00 IST
அரியலூர் மாவட்ட தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகத்தினர் நேற்று மாலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அரியலூர் மாவட்ட தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகத்தினர் நேற்று மாலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட மகளிரணி செயலாளர் பொற்செல்வி, மாநில பொதுக்குழு உறுப்பினர் காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட செயலாளர் காமராஜ் வரவேற்று பேசினார். மாவட்ட அமைப்பு செயலாளர் பொய்யாமொழி கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தின்போது, பொதுமாறுதல் கலந்தாய்வில் கடந்த ஆண்டில் பதவி உயர்வு பெற்ற மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கலந்து கொள்ளத்தக்க வகையில் 1–6–2015–க்கு முன்னர் என்ற விதியை ரத்து செய்து கடந்த ஆண்டுகளை போல் மாறுதல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

முடிவில் மாவட்ட பொருளாளர் சின்னதுரை நன்றி கூறினார்.

Similar News