காரைக்குடியில் முன் விரோத மோதலில் வாலிபருக்கு கத்திக்குத்து: 3 பேருக்கு வலைவீச்சு
காரைக்குடி:
காரைக்குடி தந்தை பெரியார் நகர் 9-வது தெருவைச்சேர்ந்தவர் மனோகரன். இவரது மகன் சங்குபாண்டி (வயது 27). இவருக்கும் சிலருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.
சம்பவத்தன்று பர்மா காலனி பஸ் நிறுத்தத்தில் சங்குபாண்டி அமர்ந்திருந்தார். அப்போது அங்கு தினகரன், ஆனந்த், ரோஷன் ஆகியோர் வந்தனர்.
அவர்கள் சங்கு பாண்டியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது மோதலாக மாற, 3 பேரும் சேர்ந்து கத்தியால் குத்தியும், அரிவாளால் வெட்டியும் சங்கு பாண்டியை காயப்படுத்தி விட்டு, தப்பி ஓடிவிட்டனர்.
பலத்த காயம் அடைந்த சங்குபாண்டி சிகிச்சைக்காக காரைக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதுகுறித்து காரைக்குடி வடக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து தினகரன் உள்பட 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.