செய்திகள்

சிட்லபாக்கத்தில் வயிற்றில் கத்தியால் குத்தி புரோகிதர் தற்கொலை முயற்சி

Published On 2016-08-04 14:38 IST   |   Update On 2016-08-04 14:38:00 IST
சிட்லபாக்கத்தில் வயிற்றில் கத்தியால் குத்தி புரோகிதர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம்:

மயிலாப்பூரை சேர்ந்தவர் அனந்த ராமன் (வயது 60). புரோகிதர். இவருக்கு திருமணம் ஆகவில்லை. நேற்று இரவு சிட்லபாக்கத்தில் உள்ள நண்பர் பத்மநாபன் வீட்டில் தங்கினார்.

இன்று அதிகாலை எழுந்த அனந்தராமன் திடீரென இந்த உலகத்தில் வாழ பிடிக்கவில்லை என்று கூறி தனது வயிற்றில் கத்தியால் குத்தினார்.

ரத்த வெள்ளத்தில் இருந்த அவர் அங்கிருந்த பூஜை அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பத்மநாபன் சிட்லபாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து பூஜை அறை கதவை உடைத்து மயக்க நிலையில் கிடந்த அனந்த ராமனை மீட்டனர்.

பின்னர் அவரை சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அனந்தராமனுக்கு 3 இடத்தில் கத்தி குத்து காயம் ஏற்பட்டு உள்ளது.

Similar News