செய்திகள்

குரோம்பேட்டையில் லாரி-பைக் மோதல்: கல்லூரி ஊழியர் பலி

Published On 2016-08-03 15:01 IST   |   Update On 2016-08-03 15:02:00 IST
குரோம்பேட்டையில் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் கல்லூரி ஊழியர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தாம்பரம்:

குரோம்பேட்டை நியூ காலனியை சேர்ந்தவர் குகன் (51) தனியார் மருத்துவ கல்லூரி ஊழியர். இவரது மனைவி உமா. இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் போடுவதற்காக நேற்று இரவு ஜி.எஸ்.டி. சாலையில் எம்.ஐ.டி. மேம்பாலத்தில் சென்றனர். சீக்கிரம் பெட்ரோல் பங்கிற்கு செல்வதற்காக பாலத்தின் குறுக்கே சென்றார்.

அப்போது சிட்லபாக்கத்தில் இருந்து குரோம்பேட்டைக்கு சென்ற லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் குகன் தூக்கிவீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி குகன் இறந்தார். உமா எந்தவித காயம் இன்றி தப்பினார்.

இதுகுறித்து தாம்பரம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Similar News