செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் பண மோசடி வழக்கில் தேடப்பட்டவர் சிக்கினார்

Published On 2016-08-02 15:07 IST   |   Update On 2016-08-02 15:07:00 IST
சென்னை விமான நிலையத்தில் பண மோசடி வழக்கில் தேடப்பட்டவரை குடியுரிமை அதிகாரிகள் கைது செய்து ஆயிரம் விளக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
ஆலந்தூர்:

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு இன்று காலை பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த மண்ணடியை சேர்ந்த முகமது நவாஸ் செரீப்பிடம் குடியுரிமை அதிகாரிகள் விசாரித்த போது பண மோசடி வழக்கில் ஆயிரம் விளக்கு போலீசாரால் தேடப்படுபவர் என்பது தெரிந்தது.

இதையடுத்து முகமது நாவஸ் செரீப்பை அதிகாரிகள் கைது செய்து ஆயிரம் விளக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Similar News