செய்திகள்
காரைக்குடியில் அரசு அதிகாரி வீட்டில் 10 பவுன் நகை திருட்டு கணவன்-மனைவி கைது
காரைக்குடியில் அரசு அதிகாரி வீட்டில் நகை திருடிய கணவன்-மனைவியை போலீசார் கைது செய்தனர்.
காரைக்குடி:
காரைக்குடி முத்துப் பட்டிணத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி கலா (வயது56). ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. இவர் அதே பகுதியில் புது வீடு கட்டி சில நாட்களுக்கு முன்பு குடிபுகுந்தார்.
இந்நிலையில் வீட்டில் இருந்த 10 பவுன் நகை திடீரென மாயமானது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து கலா காரைக்குடி வடக்கு போலீசில் புகார் செய்தார்.
சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கலாவின் பக்கத்து வீட்டில் வசிக்கும் கண்ணன், அவரது மனைவி ராணி ஆகியோர் நகை திருடியது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து 10 பவுன் நகையை மீட்டனர்.