செய்திகள்
காரைக்குடியில் இளம்பெண் தற்கொலை
காரைக்குடியில் இளம் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காரைக்குடி:
காரைக்குடி சத்திய மூர்த்தி நகரை சேர்ந்தவர் செல்வக்குமார். இவருக்கும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கவிதா (29) என்பவருக்கும் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. செல்வக்குமார் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் செல்வக் குமார் புதுவீடு கட்டி விழா நடத்த ஏற்பாடு செய்தார். அழைப்பு பத்திரிகையில் அக்காவின் பெயரை சேர்க்க வேண்டும் என்று மனைவியிடம் கூறியுள்ளார். ஆனால் கவிதா இதற்கு மறுத்துள்ளார். இதனால் கணவன்– மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதில் விரக்தியடைந்த கவிதா சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காரைக்குடி தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகர்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.