செய்திகள்

செந்துறை அருகே மின்சாரம் தாக்கி மாடு பலி

Published On 2016-08-01 21:00 IST   |   Update On 2016-08-01 21:00:00 IST
செந்துறை அருகே மின்சாரம் தாக்கி சினை மாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது.
செந்துறை:

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சென்னிவனம் கிராமத்தை சேர்ந்தவர் நல்லம்மாள். இவர் பசுமாடுகள் வளர்த்து வருகிறார்.

சம்பவத்தன்று இவருடைய மாடுகள் அப்பகுதியில் உள்ள வயல்களில் மேய்ந்து கொண்டு இருந்தன. அப்போது அப்பகுதியில் விவசாய மோட்டாருக்கு செல்லும் மின்கம்பி ஒன்று காற்றில் அறுந்து விழுந்து கிடந்தது.

இதில் ஒரு சினை மாடு சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது.

Similar News