செய்திகள்

மீன்சுருட்டி அருகே இடி தாக்கியதில் பசு மாடு பலி

Published On 2016-07-29 17:38 IST   |   Update On 2016-07-29 17:38:00 IST
மீன்சுருட்டி அருகே நேற்று மாலை திடீரென மழை பெய்தது. அப்போது இடி தாக்கியதில் பசு மாடு பலியானது.

ஜெயங்கொண்டம்:

மீன்சுருட்டி அருகே உள்ள கைலாசபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன் (வயது55), விவசாயி. இவர் தனது மாடுகளை வீட்டின் முன்புறம் உள்ள தென்னை மரத்தில் கட்டி வைத்திருந்தார்.

நேற்று மாலையில் இப்பகுதியில் திடிரென மழை பெய்ந்தது. அப்போது பலமான இடி சத்தம் கேட்டது. குணசேகரன் வீட்டின் முன்புறம் இருந்த தென்னை மரத்தில் மின்னல் தாக்கியதில், 40 அடி உயரமுள்ள தென்னை மரம் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. தென்னை மரத்தின் கீழ் கட்டப்பட்டு இருந்த குணசேகரனின் பசு மாடு மின்னல் தாக்கியதில் இறந்தது போனது.

தென்னை மரம் தீப்பற்றி எரிந்து கொண்டு இருந்த நிலையில் ஜெயங்கொண்டம் தீ அணைப்பு நிலையத்திற்க்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக தீயணைப்பு நிலைய அலுவலர் பூபதி தலைமையில் தீயை அனைத்தனர். மின்னல் தாக்கியதில் பசு மாடு இறந்த செய்தி கேட்டு அந்த பகுதியே பரப்பரப்பாக காணப்பட்டது.

இது குறித்து தகவலறிந்த மீன்சுருட்டி போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News