செய்திகள்
ஜெயங்கொண்டம் அருகே இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை: கணவர் போலீசில் புகார்
ஜெயங்கொண்டம் அருகே இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகில் உள்ள வட வீக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அன்புச்செல்வன் (வயது 55). இவரது மனைவி கலைச்செல்வி(50). கடந்த ஒரு வாரமாக மன உலைச்சலில் இருந்து வந்துள்ளார். இது பற்றி கணவன் கேட்டும் ஏதும் பதில் சொல்லாமலேயே இருந்துள்ளர். இந்நிலையில் நேற்று காலை குடும்பத்தார் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் பின்புறம் உள்ள வேப்பமரத்தில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அன்புச் செல்வன் ஜெயங்கொண்டம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் செல்லமுத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.