செய்திகள்

சிவகங்கையில் மோட்டார் சைக்கிள் மோதி போலீஸ்காரருக்கு எலும்பு முறிவு: கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது

Published On 2016-07-25 16:57 IST   |   Update On 2016-07-25 16:57:00 IST
சிவகங்கையில் மோட்டார் சைக்கிள் மோதி போலீஸ்காரருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. இது தொடர்பாக கல்லூரி மாணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை:

சிவகங்கை நகர் போக்குவரத்து தலைமை காவலராக இருப்பவர் நாகராமன். இவர் நேற்று மாலை சிவகங்கை-மதுரை சந்திப்பு பகுதியில் போக்குவரத்தை சரி செய்து கொண்டிருந்தார்.

அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வேகமாக வந்தனர். உடனே நாகராமன் மோட்டார் சைக்கிளை மறித்தார். ஆனால் அந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் அவர் மீது மோதி விட்டு தப்பினர்.

இதில் போலீஸ்காரருக்கு கால் விரல்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. நாகராமன் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து சிவகங்கை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன், சப்-இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த பி.வேளாங்குளத்தை சேர்ந்த அழகுராஜா (23), மாத்தூரை சேர்ந்த கந்தசாமி ஆகியோர் கைது செய்தனர். தலைமறைவாகி உள்ள சூர்யா என்பவர் தேடி வருகின்றனர். இதில் அழகுராஜா சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News