செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் தவறி விழுந்து பரிதாப சாவு

Published On 2016-07-25 16:29 IST   |   Update On 2016-07-25 16:29:00 IST
கருங்கல்பாளையம் சோதனை சாவடி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
ஈரோடு:

ஈரோடு, கருங்கல்பாளையம் சோதனை சாவடி அருகே நேற்று மாலை வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக சென்ற பெண் மீது திடீரென மோதி விட்டு சாலையோரமாக மோட்டார் சைக்கிளுடன் விழுந்தார். இதில் அந்த வாலிபருக்கு தலையில் பலத்த அடிபட்டு உயிருக்கு போராடினார்.

அருகில் இருந்தவர்கள் அந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

எனினும் சிகிச்சை பலனின்றி அந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் இறந்த வாலிபர் பெயர் ஜோதி குமார் (வயது39) என தெரிய வந்தது.

Similar News