செய்திகள்
ஜெயங்கொண்டம் அருகே லாரி மோதி முதியவர் படுகாயம்
ஜெயங்கொண்டம் அருகே லாரி மோதி முதியவர் படுகாயம் அடைந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி லாரி டிரைவரை கைது செய்தனர்.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகே வடவீக்கம் காலனி தெருவைச் சேர்ந்தவர் ராஜாங்கம் (வயது 68). இவர் நேற்று ஜெயங்கொண்டம் – விருத்தாசலம் சாலையில் கல்லாத்தூர் நோக்கி தனது சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த லாரி அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ராஜாங்கத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து ராஜாங்கத்தின் மனைவி அமிர்தம் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் செல்லமுத்து வழக்குபதிவு செய்து லாரி ஓட்டிவந்த ஒட்டப்பிடாரம் அருகேயுள்ள பசுவந்த பில்லாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த குருசாமி (47) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.