செய்திகள்

ஓடும் பஸ்சில் பணம் திருடிய பெண் கைது

Published On 2016-07-24 17:32 IST   |   Update On 2016-07-24 17:32:00 IST
ஓடும் பஸ்சில் தனியார் நிறுவன அதிகாரியிடம் பணம் திருடிய பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

கோபி:

சித்தோடு அருகே உள்ள வசுவப்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரதுமகன் சங்கர் !வயது 23). இவர் ஒரு தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் நிர்வாக அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று இவரும் இவரது நண்பர் ஜனார்த் தனம் என்பவரும் வேலை வி‌ஷயமாக கோபி அருகே உள்ள கொளப்பலூர் சென்றனர்.

பிறகு அவர்கள் அரசு டவுன் பஸ்சில் வந்து கொண்டு இருந்தனர். அவர்களின் பின்னால் ஒரு இளம் பெண் நின்று கொண்டு இருந்தார்.

இந்த பஸ் கொளப்பலூர்-கோபி அருகே வரும் போது அந்த பெண் சங்கரின் கைப்பையை நைசாக திறந்து அதில் இருந்த ரூ.300-ஐ திருடினார்.

இதன்பிறகு அவர் பஸ்சில் இருந்து தப்பி செல்ல முயன்றார். இதை கவனித்து விட்ட சங்கர் அவரது நண்பர் மற்றும் பயணிகள்சேர்ந்து அந்த பெண்ணை மடக்கி பிடித்தனர்.

இதன்பிறகு அவர் கோபி போலீசில் ஒப்படைக்கப்பட்டார். அந்த பெண்ணிடம் போலீசார் விசாரித்தபோது அவர் அரச்சலூர் அருகே உள்ள நாச்சிவலசு கரடு என்ற இடத்தை சேர்ந்த சின்னக் கண்ணன் என்பவரின் மனைவி துர்க்கா (வயது29) என்பதுதெரிய வந்தது.

இதையொட்டி துர்க்காவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News