செய்திகள்
காரைக்குடி அருகே வேன் மீது மொபட் மோதல்: தொழிலாளி பலி
காரைக்குடி அருகே வேன் மீது மொபட் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார்.
காரைக்குடி:
காரைக்குடி அருகே ஆத்தங்குடியை சேர்ந்தவர் அடைக்கண் (வயது55), கூலித்தொழிலாயான இவர் நேற்று இரவு தனது மொபட்டில் காரைக்குடிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.
ஆத்தங்குடி அருகே வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த வேன் மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அடைக்கண் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்தார்.
உடனே அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது நிலைமை மோசமடைய சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் வழியிலேயே அடைக்கண் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து குன்றக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.