செய்திகள்
காளையார்கோவிலில் குளத்தில் மூழ்கி பெண் பலி
காளையார்கோவிலில் குளிக்க சென்ற மூதாட்டி குளத்தில் மூழ்கி பலியானார்.
காளையார் கோவில்:
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் தவசியார் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 55). இவரது மனைவி சாத்தாயி (50).
சம்பவத்தன்று இவர் அதே பகுதியில் உள்ள ஒரு குளத்தில் குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக குளத்தில் தவறி விழுந்தார். இதில் அவர் மூழ்கி மூச்சுத்திணறி சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காளையார் கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து சாத்தாயி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கல்யாணகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.